மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நேபாள குடியரசுத் தலைவரானார் ராம் சந்திர பெளடெல்

நேபாள குடியரசுத் தலைவராக ராம் சந்திர பெளடெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

News image

ராம் சந்திர பெளடெல்

Updated On :9 மார்ச் 2023, 9:40 pm

நேபாள குடியரசுத் தலைவராக ராம் சந்திர பெளடெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்ற வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் மார்ச் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதைபொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இரண்டு வாக்குப்பதிவு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மாலை 3 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண உறுப்பினர்களும் வாக்குகளை செலுத்தினர்.

இந்த தேர்தலில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுபாஷ் நெம்பாங்கு மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் ராம் சந்திர பௌடெல் போட்டியிட்டனர். 

மொத்தம் உள்ள 882 வாக்குகளில் 831 வாக்குகள் பதிவான நிலையில் 566 வாக்குகள் பெற்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக ராம் சந்திர பெளடெல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.