கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விருது விழா: ஆர்ஆர்ஆர் பாடல் விருது வெல்ல வாய்ப்பு?

கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விருது விழா: ஆர்ஆர்ஆர் பாடல் விருது வெல்ல வாய்ப்பு?

உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஆஸ்கர் விருதுவிழா திங்கள்கிழமை தொடங்கியது. 

உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஆஸ்கர் விருதுவிழா திங்கள்கிழமை தொடங்கியது. 

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கியது. இந்த விழாவை இந்திய நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையிலும், ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com