ட்விட்டரின் புதிய சிஇஓ இவரா?

எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய சிஇஓவை நியமித்துள்ளார்.
ட்விட்டரின் புதிய சிஇஓ இவரா?

எலான் மஸ்க் தனது ட்விட்டர் நிறுவனத்துல்ல புதிய சிஇஓவை நியமித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்க உள்ளார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன், அதே நேரத்தில் நான் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன்" எனத் தெரிவித்தார்.

எலான் மஸ்க் ஏற்கனவே, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண்  சிஇஓ 6 வாரங்களில் பொறுப்பேற்று பணியை தொடங்குவார் என்றும், மென்பொருள் தயாரிப்பு மற்றும் சிசோப்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு இருக்கும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

புதிதாக பொறுப்பேற்க உள்ள 60-வயதான் லிண்டா யாக்காரினோ டிரம்பிற்கும் நன்கு அறிமுகம் ஆனவர். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நியமித்த குழுவில் இடம் பெற்றார் இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com