இரண்டாவது முறையாக இஸ்ரேல் செல்லும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இரண்டாவது முறையாக இஸ்ரேல் செல்கிறார்.
இரண்டாவது முறையாக இஸ்ரேல் செல்லும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7-ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். எனவே போரை நிறுத்த வேண்டி ஐ.நா.அமைப்பு மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இப்போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது.போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் (அக்டோபர் 3) இரண்டாவது முறையாக இஸ்ரேல் செல்ல உள்ளார். 

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும், அக்டோபர் 18-ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com