

காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களின் ஒரு நாளுக்கான சராசரி உணவு என்பது வெறும் இரண்டு ரொட்டித் துண்டுகள் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் முகமையின் இயக்குநர் தாமஸ் ஓயிட்.
உணவு பற்றாக்குறையைத் தாண்டி இப்போது குரல் கேட்பது தண்ணீருக்குத் தான்,
193 நாடுகளின் ஐ.நா முகவர்களுடனான காணொலி கூட்டத்தின் போது தாமஸ் ஓயிட் பேசும்போது, ‘‘ காஸா முழுவதும் இறப்பும் அழிவுமே காணக் கிடைக்கிறது” தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமில்லை, தங்களின் வாழ்வு, உணவு, எதிர்காலம் குறித்து அவர்கள் பயத்தில் உள்ளனர்.
காஸாவின் 17 லட்சம் மக்களுக்கும் உணவு வழங்கும் நோக்கில் 89 பேக்கரிகளுக்கு ஐநா முகமை உதவி அளித்து வருகிறது.
தண்ணீருக்கான தேவை அத்தியாவசியமாக உள்ள நிலையில் மக்கள் உப்புத்தன்மை கொண்ட நீரையும் நிலத்தடி நீரையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
குடிநீர்ப் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய எரிபொருள் வேண்டியதாகவுள்ளது.
ஐநாவின் 149 முகாம்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர். போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வடக்கில் உள்ள பல முகாம்களை இப்போது தொடர்பு கொள்ள இயலவில்லை.
அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுப்பதற்கும் போதிய வசதிகள் முகாம்களில் இல்லை. முறையான சுகாதாரமின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல்: இந்தியா நிலை மாறுவது ஏன்?
முகாம்களில் பெரும்பாலானவை பள்ளிகளில் அமைந்துள்ளது. பெண்களும் குழந்தைகளும் வகுப்பறைகளில் படுத்து கொள்ள, ஆண்கள் திறந்த வெளியில் உறங்குகிறார்கள்.
ஐநாவால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலவில்லை. 50-க்கும் மேற்பட்ட முகாம்கள் வெவ்வேறு தாக்குதல்களில் பாதிப்படைந்துள்ளன.
ஐநாவின் 72 ஊழியர்கள் இறந்துள்ளனர். இதுவரை எந்த போரிலும் இல்லாத அளவு இது.
இதையும் படிக்க: இஸ்ரேலின் மற்றுமொரு பயங்கரத் தாக்குதல்!
பாலஸ்தீனத்தின் ஐநா தூதர் ரியாத் மன்சூர், “காஸாவின் 50 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. புரிந்து கொள்வதற்கும் விளக்குவதற்கும் அப்பாற்பட்ட நிலையில் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை சொல்ல வருவது, இதை நிறுத்த நம்மால் என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.