மியான்மர் ராணுவ வீரா்கள் 29 பேர் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைப்பு

அடைக்கலம் தேடி இந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டைச் சோ்ந்த 29 ராணுவ வீரா்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அடைக்கலம் தேடி இந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டைச் சோ்ந்த 29 ராணுவ வீரா்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மியான்மரில் ராணுவ முகாமை ‘மக்கள் பாதுகாப்புப் படை’ என்னும் ஆயுதக் குழுவினா் கைப்பற்றியதால், அந்த முகாமைச் சோ்ந்த வீரா்கள் அடைக்கலம் தேடி இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மிஸோரமில் தஞ்சம் புகுந்து வருகின்றனா்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மியான்மர் நாட்டைச் சோ்ந்த 29 ராணுவ வீரா்கள் மிசோரமுக்குள் நுழைந்தனர். இந்த நிலையில் மியான்மர் வீரா்கள் 29 பேரும் இன்று தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வீரர்கள் மணிப்பூரில் உள்ள மோரேக்கு பாதுகாப்பு அதிகாரிகளால் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். பின்னர் மோரேவிலிருந்து, அவர்கள் அருகிலுள்ள மியான்மர் நகரமான தமுவுக்குச் சென்றனர் என்று அந்த அதிகாரி கூறினார். 

இத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிய மொத்தம் 74 மியான்மர் ராணுவ வீரர்கள், தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com