பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார்!
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேமி ஃபாக்ஸ் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார்.


பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகரும், நகைச்சுவையாளருமான ஜேமி ஃபாக்ஸ் மீது கடந்த புதன்கிழமையன்று பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார்.
ஜேன் டோன் எனும் பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு மது அரங்கம் ஒன்றில் ஜேமி ஃபாக்ஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதற்கு பதலளித்த ஜேமி, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று மேன்ஹாட்டனில் உள்ள மாநில உச்சநீதி மன்றத்தில் அந்தப் பெண், ஜேமி மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்த வழக்கில் ஜேமி தன் அந்தரங்கப் பகுதிகளை தனது அனுமதியின்றி தன் விருப்பத்திற்கு எதிராக தொட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் தெரிவித்திருப்பதாவது, அவரும் அவரது தோழியும் மது அரங்கம் ஒன்றில் ஜேமியைச் சந்தித்ததாகவும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : காஸாவில் வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்தது
இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இதற்கு பதிலளித்த ஜேமி ஃபாக்ஸின் செய்தி தொடர்பாளர், அப்படி சம்பவம் நடக்கவே இல்லை. ஏற்கனவே 2020ல் இதே பெண் இதைப்போன்ற வழக்கைத் தொடர்ந்துள்ளார். அது பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது மீண்டும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வைத்து, தொடர்ந்து ஜேமிக்கு அவப்பெயர் தேடித்தருகிறார்கள். இந்தப் பொய்யான வழக்கும் விரைவில் தள்ளுபடி ஆகிவிடும் என எங்களுக்குத் தெரியும். அதன்பின் அந்தப் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது ஜேமி வழக்கு தொடர விரும்புகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...