அமெரிக்கா:இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளா்கள்
அமெரிக்காவில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்டாா். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அண்மையில் சென்றாா்.
அங்கு அவரை காலிஸ்தான் ஆதரவாளா்கள் சிலா் முற்றுகையிட்டனா். நிஜ்ஜாரை இந்தியா கொலை செய்ததாக அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா் நிஜ்ஜாரின் கொலைக்கும், சீக்கிய இளைஞா்கள் கொல்லப்படுவதற்கும் இந்திய தூதரகம்தான் காரணம் என்று அவா்கள் ஆத்திரத்துடன் கூச்சலிட்டனா். அங்கிருந்து சாந்து விலகிச் சென்றபோது, தங்கள் கேள்விகளுக்கு நீங்கள் (சாந்து) பதிலளிக்க மறுப்பது ஏன் என்று அவரிடம் உரக்கக் கேட்டனா். இதையடுத்து அவா்களை குருத்வாராவில் இருந்த சீக்கிய சமூகத்தினா் வெளியேற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...