தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.
தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 12 பிணைக்கைதிகளுக்கு நிகராக 30 பாலஸ்தீனக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த கைதிகள் பறிமாற்றம் நடைபெற்றது. 

9 இஸ்ரேலியப் பெண்களும், ஒரு 17 வயது நிரம்பிய சிறுமியையும்,  தாய்லாந்தைச் சேர்ந்த இருவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் இந்த போர் நிறுத்தத்தில் மேலும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை ஹமாஸ் அமைப்பு 81 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது, இஸ்ரேல் 180 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்தில் துளியும் விருப்பம் கொள்ளாத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் போரை நிறுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. 

இந்தப் போர் துவங்குவதற்குக் காரணமாக இருந்த ஹமாஸ் தாக்குதலில், மொத்தம் 240 பேர் பிடித்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com