கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: விமான நிலையங்களில் குவியும் வெளிநாட்டினர்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :7 அக்டோபர் 2023, 10:50 am

DIN

டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.

இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெற்றியைப் பெற முடியாது.. போர்தான் என்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் வெல்வோம் என்று அவர் விடியோவில் தெரிவித்துள்ளார். நமது எதிரி அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும், இதுவரை அவர் கண்டிராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். 

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே, பாலஸ்தீனர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர் என்று பாலஸ்தீன அதிபர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, காஸா பகுதியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் மையப்பகுதியும் தெற்குப்பகுதியிலும் சனிக்கிழமை காலை 3.5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இஸ்ரேல் ஒரு அவசரநிலையில் உள்ளது" மற்றும் ஹமாஸின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு "கடுமையான இராணுவ பதிலடியை" லாபிட் ஆதரிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக அறிக்கை கூறியுள்ளது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.