கிளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்துக்கான நோபல்

நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
கிளாடியா கோல்டின்
கிளாடியா கோல்டின்


நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கான தொழில்வாய்ப்புகள் தொடர்பான இவரது ஆய்வுக்காக நடப்பாண்டுக்கான பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கான தொழில்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி, பெண்களுக்கான தொழில்வாய்ப்புகள் குறித்து வெளிப்படுத்தியமைக்காக இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் அகாதெமி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதியப்பட்ட வரலாற்றுத் தரவுகளை ஒப்பிட்டு, அவற்றில் திருத்தங்களை மேற்கொண்டு, பெண்களுக்கான தொழில்வாய்ப்புகள் தொடர்பான பல ஆச்சரியமூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டார். மனிதவளத்தில், பெண்களுக்கான வாய்ப்புகள் எல்லாம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கான அடிப்படை புரிதல்களை வெளியிட்டு, தொழிலாளர் சந்தையில், பெண்களின் தேவை எந்த அளவில் இருக்கிறது என்ற தரவுகளையும் வெளியிட்டார்.

பெண்களின் பணித்தேர்வு என்பது, அவர்களது திருமணம் மற்றும் குடும்ப பொறுப்புகள், குடும்ப உறவுகளின் அடிப்படையிலேயே பகுப்பாய்வு செய்யப்பட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதில் மாற்றங்கள் ஏற்பட மேலும் காலங்கள் எடுக்கலாம் என்றும், அவர்களது எதிர்பார்ப்புகளுடன் கூடிய தேர்வு, சில வேளைகளில் பொய்யாகும்போது ஒட்டுமொத்த பணித்திறனும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல், அமைதி என ஐந்து துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான நோபல் பரிசு கடந்த 2ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.  பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8 கோடி) பரிசுத் தொகையை கொண்டதாகும். நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com