சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது

News image
Updated On :11 அக்டோபர் 2023, 3:10 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மைய தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை(அக்.11)  காலை 6.11 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இந்த நடுநக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கனவே நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நில அதிா்வுகளும் ஏற்பட்டன.

நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தில் பலியானோரின் எண்ணிக்கை 4000 -ஆக உயர்ந்துள்ளது. சுமார் 20 கிராமங்களில் 1,983 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேசிய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 குழுக்கள், உள்ளூா்வாசிகள் மற்றும் தன்னாா்வலா்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

ஹெராத் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.