காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,500- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஆறாவது நாளாக வன்முறை தொடர்ந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் தொடர்ந்து வருகின்றது. தெற்கு இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஹமாஸ் படையினருடன் அந்நாட்டு ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். மேலும், காஸாவில் ஹமாஸ் படையினரின் நிலைகளைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
திடீரென மூண்டுள்ள இந்தப் போரில் 1,300 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். 3,268 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் 443 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உடல்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆறாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்க: லியோவுக்குத் தடையாக தில் ராஜூ?
இதற்கிடையில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடங்கியதிலிருந்து குறைந்து 1,203 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 5,763 பேர் காயமடைந்தாக காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் மொத்தம் 2,18,597 பேர் இதுவரை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் அல் கராமா, அல் ரிமால் மற்றும் அல் நசிர் உள்ளிட்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் உள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதில் வசித்துவந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் பலியாகியுள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்து 28 பாலஸ்தீனிய குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.