இஸ்ரேல்: 254 நேபாள மாணவர்களுடன்  முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 254 நேபாள மாணவர்களை ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது. 
இஸ்ரேல்: 254 நேபாள மாணவர்களுடன்  முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 254 நேபாள மாணவர்களை ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் காத்மாண்ட் வந்தது. 

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 6 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேபாள அரசு இஸ்ரேலில் இருந்து நேபாள மாணவர்களை திரும்ப அழைத்து வருவதற்கான கூடுதல் ஏற்பாடுகளை செய்வதாக அறிவித்தது.

அதன்படி, இஸ்ரேலில் சிக்கித் தவித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக வியாழக்கிழமை காலை டெல் அவிவ் நகருக்குச் சென்ற முதல் மீட்பு நேபாள ஏர்லைன்ஸ் விமானம், 254 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காத்மாண்டுவில் தரையிறங்கியது. அதே நேரத்தில் 249 பேர் இன்னும் விமானத்திற்காக இஸ்ரேலில் காத்திருக்கின்றனர்.

"டெல் அவிவில் உள்ள நேபாள தூதரகம், நேபாள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க விரும்புபவர்கள் மற்றும் நேபாளத்திற்கு திரும்ப விரும்புபவர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 557 நேபாள மக்கள் பதிவு செய்துள்ளனர், அவர்களில் 503 பேர் நேபாளம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் 254 மாணவர்கள் முதல் கட்டமாக காத்மாண்ட் வந்துள்ளனர். 

"தற்போது டெல் அவிவில் தினசரி வர்த்தக விமானங்கள் சேவையை தொடங்குகின்றன. இதில், தேவையின் அடிப்படையில், மாணவர்கள் நேபாளம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும்" என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com