
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ரூ.100 கோடி நிதி அறிவித்துள்ளார்.
ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 6 பேர் மரணமடைந்ததாகவும், 10 பேர் குறித்து எந்தத் தகவலும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
படிக்க | தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இது தொடர்பாக பேசிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பாலஸ்தீன மக்கள் விரும்பும் எதிர்காலத்தை ஹமாஸ் பிரதிநிதித்துவபடுத்தவில்லை.
ஹமாஸ் அமைப்பினரால் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் படையினர் பிணைக்கைதிகளாக வைத்துள்ள 199 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இஸ்ரேலில் சிக்கியுள்ள பிரிட்டன் குடியுரிமைப் பெற்றவர்களை மீட்க 8 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.