கனடா மக்களுக்கு இந்தியாவில் ஆபத்து: எச்சரிக்கும் கனடா

இந்தியாவில் அதீத எச்சரிக்கை உணர்வைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என கனடா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. 
இரு நாட்டு பிரதமர்கள்
இரு நாட்டு பிரதமர்கள்
Published on
Updated on
1 min read

இந்தியா - கனடா வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாடு இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.   

இந்த அறிவுறுத்ததல் கனடா, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

``கனடாவுக்கும் இந்தியாவுக்குமான சமீபத்திய மோதலால், கனடாவுக்கு எதிராக போராட்டங்களுக்கான அழைப்பும் அவதூறும் வழக்கமான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்றன. ஆர்ப்பாட்டங்களும் கனடாவுக்கு எதிரான போரட்டங்களும் நிகழலாம். கனடா மக்கள், மிரட்டல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகலாம். தலைநகரான தில்லியில் கனடா மக்கள் தங்களை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாமலும் உங்களின் தனிப்பட்ட விபரங்களைப் புதியவர்களிடம் பகிராமலும் இருக்க வேண்டும்” என அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறிய குற்றங்கள் அங்கு வழக்கமானவை. பெரும்பாலான நகரங்களில் குற்றவாளிகள் வெளிநாட்டவர்களையே குறி வைப்பார்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளைத் திரும்ப பெற்றதால், சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நேரடி தூதரக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் வசிப்பவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதெனும் உதவி தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள தூதரக ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியா, கனடாவில் வாழும் தனது குடிமக்களுக்கு இதே போலான பயண அறிவுறுத்தலை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com