நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிய விமானம்!

விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

News image

ஓடுபாதையிலிருந்து சறுக்கி புல்வெளியில் நின்ற விமானம்

Updated On :21 அக்டோபர் 2023, 2:02 pm

DIN


பிரிட்டனில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து சறுக்கி புல்வெளியில் பாய்ந்ததால் பரபரப்பு நிலவியது. விமானத்திலிருந்த பயணிகள் அச்சமடைந்தனர். 

பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் பல பகுதிகளில் பாபேட் புயல் சூறையாடியுள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் நிலவும் கடும் புயல், கனமழை காரணமாக பிராட்ஃபோர்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது சறுக்கியது. 
ஓடுபாதையிலிருந்து விலகி புல்வெளி மைதானத்திற்குள் புகுந்தது. 

விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக வந்த மீட்புப் படையினர் விமானத்திலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். 

கிரீஸ் நாட்டின் கோர்ஃபு தீவிலிருந்து பிரிட்டனுக்கு இந்த விமானம் வந்துள்ளது. இதில் 100 பயணிகள் பயணித்துள்ளனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிராட்ஃபோர்டு விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் வேறு பாதைக்கு மாற்றிவிடப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.