இஸ்ரேலில் பிரான்ஸ் அதிபர்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் தலைநகருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
இஸ்ரேலில் பிரான்ஸ் அதிபர்
இஸ்ரேலில் பிரான்ஸ் அதிபர்


இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் தலைநகருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

ஏற்கெனவே கடந்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினர்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்குச் சென்றுள்ள பிரான்ஸ் அதிபரும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆதரவு அளிக்கவுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மூன்றாவது வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com