இன்ஸ்டாகிராமால் மன அழுத்தம், தூக்கமின்மை! மெட்டா மீது வழக்கு!!

குழந்தைகள், இளைஞர்களின் மனஅழுத்தத்துக்கு காரணமாவதாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இன்ஸ்டாகிராமால் மன அழுத்தம், தூக்கமின்மை! மெட்டா மீது வழக்கு!!

குழந்தைகள், இளைஞர்களின் மனஅழுத்தத்துக்கு காரணமாவதாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கலிஃபோர்னியா, நியூ யார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 33 மாகாணங்களில் மெட்டா மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, தங்களது வலைதளத்தின் மூலம் குழந்தைகளையும் இளைஞர்களையும் தவறாக வழிநடத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் லாபம் மட்டும் தான் என ஓக்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள், இளைஞர்கள் அதிக நேரம் அதில் இருப்பதால், அவர்களை நுகர்வோர்களாக மாற்றி, அதில் கூடுதல் நேரம் இயங்குவதற்கு அவர்களை நிலைப்படுத்துகிறது. அவர்கள் லாபத்துக்காக அதிக விளம்பரங்கள் பெறுவதற்கு இளம் பயனர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். 

சமூகவலைதள பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் குழந்தைகளின் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம், கற்றல் குறைபாடு, மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல எதிர்மறை நிகழ்வுகளுக்கு காரணமாவதாக தெரிவிக்கின்றன. 

இந்த வழக்கு குறித்து மெட்டா நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இத்தகைய வழக்குகஆல் அதிருப்தி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல செயலிகளுக்கு வயது வாரியான தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதை சட்டம் பரிசீலிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டன்னிலும் இன்று மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com