காஸா மீதான தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் கண்டனம்!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் யூசப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் கண்டனம்!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 22-வது நாளை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், பல்வேறு உலகநாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிக்கும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறிவருகிறது.

கடந்த 21 நாட்களாக காஸா மீது வான்வழி தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அடிக்கடி காஸாவுக்குள் பீரங்கிகளையும், ராணுவ வீரர்களையும் அனுப்பி ஒத்திகை பார்த்து வருகிறது. 

கடந்த புதன்கிழமை இரவு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை அழித்துவிட்டு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பியது. 

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (அக்டோபர் 27) மீண்டும் காஸா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் உதவியுடன் காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் ஹமாஸ் நிலைகளை தாக்கின. இந்த தாக்குதலால் காஸா பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்சா யூசப் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதனை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யூசப், “காஸா மிக மோசமான குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் தன் மௌனத்தை கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com