ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக லூனா-25 விண்கலத்தை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் கடந்த 10-ஆம் தேதி விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் கடந்த 16-ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. விண்கலத்தை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், லூனா-25 விண்கலமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மீது வேகமாக விழுந்து நொறுங்கியது.
இந்நிலையில் லூனா-25 விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் விழுந்ததால் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு இப்போதைய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.