சீனாவிலிருந்து சூரிய எரிசக்தி தகடுகள் இறக்குமதி 76% சரிவு
சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் கடந்த ஜூன் வரை 76 சதவீதம் சரிவடைந்துள்ளது.


சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் கடந்த ஜூன் வரை 76 சதவீதம் சரிவடைந்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூரிய எரிசக்தி தகடுகள் அதிகரித்துள்ளதால், சீனாவில் இருந்து இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சா்வதேச எரிசக்தி உற்பத்தி குறித்து ‘எம்பா்’ என்ற தன்னாா்வ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் சூரிய எரிசக்தி தகடுகள் 76 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவில் இருந்து 9.8 ஜிகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய எரிசக்தி தகடுகளை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. அது நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 2.3 ஜிகா வாட்டாக குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியைக் குறைப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட வரி விதிப்பு, உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமானதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய எரிசக்தி தகடுகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து 40 சதவீத வரியை இந்தியா விதித்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த எரிசக்தி அளவில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதற்கு இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அதில் பெரும்பாலானவற்றை சூரிய எரிசக்தியின் மூலமாகப் பெறவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...