பிரிட்டனை வழிநடத்த நானே சரியான பிரதமர்: ரிஷி சுனக்

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சவால்கள் அடங்கிய பிரிட்டனை வழிநடத்தி செல்ல நானே சரியான நபர் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 
பிரிட்டனை வழிநடத்த நானே சரியான பிரதமர்: ரிஷி சுனக்

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சவால்கள் அடங்கிய பிரிட்டனை வழிநடத்தி செல்ல நானே சரியான நபர் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

தனது குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக கலிஃபோர்னியா சென்றிருந்த  அவர் மீண்டும் முழுவீச்சில் நிர்வாகப் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார். நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரிட்டனை வழிநடத்த நானே சரியான நபர் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது: நாட்டின் பணவீக்கம் 7.9 சதவிகித்தில் இருந்து 6.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது பொருளாதாரம் சரியான திசையில் பயணிப்பதற்கான அடையாளம். பிரிட்டனின் சரியான பிரதமர் நான் என நினைக்கிறேன். நாடு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சவாலான காலத்தில் சரியான திசையில் பயணித்து அதன் பயன்களைப் பெற வேண்டும். மாறும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பிரிட்டன் பயனடைகிறது. வளர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்குதான் அமைந்துள்ளன. இங்குதான் அந்த நிறுவனங்கள் வளர்கின்றன. இங்குதான் அவர்கள் முதலீடு செய்கின்றனர். இங்குதான் அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குகிறார்கள்.  எதிர்காலத்தை நினைத்து நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எதிர்காலத்தில் எங்களுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால், அந்த சவால்களை திறம்பட கையாண்டு சிறப்பாக வளர்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com