காஸாவில் முழுவீச்சில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் இஸ்ரேல் காஸா மீது முழுவீச்சில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
மேற்குக் கரை பாலஸ்தீன மக்கள்
மேற்குக் கரை பாலஸ்தீன மக்கள்

காஸா பகுதியில் மீண்டும் குண்டுவீச்சுகளும் கரும்புகையும் நிறைந்துள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

காஸாவின் சுகாதார அமைச்சகம், போர் மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

நவ.24 தொடங்கிய போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை அதிகாலையோடு முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தத்தை நீடிப்புக்கான எந்த அறிகுறியையும் மத்தியஸ்தம் மேற்கொண்ட நாடுகள் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், காஸாவின் தெற்கு, வடக்கு மற்றும் மைய பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸும் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

காஸாவின் தெற்கு எல்லையான ராபா பகுதியில் ஒரு வீட்டை இஸ்ரேல் விமானங்கள் தாக்கியதில் ஆறு பேர் பலியாகினர். மத்திய காஸாவில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
 
கான் யூனிஸில் தாக்குதல் மேற்கொள்ள போவதால் அங்கிருந்து மக்களை இடம்பெயரச் சொல்லி இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை அந்தப் பகுதியில் வீசியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனது மூன்றாவது இஸ்ரேலிய பயணத்தில் பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்தார். அவர், போர் மீண்டும் ஆரம்பமானால் இஸ்ரேல் ராணுவம் சர்வதேச மனிதநேய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com