
தங்களிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் படையினா் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், அப்போது நடைபெற்ற மோதலில் ஒரு பிணைக் கைதி உயிரிழந்ததாகவும் ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அந்த அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-காஸம் பிரிகேட் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் சிறப்புப் படையினா் நெருங்கி வருவதை ஹமாஸ் வீரா்கள் கண்டறிந்தனா். அதையடுத்து, இஸ்ரேல் படையினருடன் ஹமாஸ் வீரா்கள் மோதலில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான இஸ்ரேல் படையினா் கொல்லப்பட்டனா்; பலா் காயமடைந்தனா்.இந்த மோதலின்போது பிணைக் கைதி ஒருவரும் உயிரிழந்தாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றது என்று அந்தப் பிரிவில் குறிப்பிடப்படவில்லை.இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து கூற மறுத்துவிட்டது. இது போன்ற தகவல்களை வெளியிட்டு மனரீதியிலான போரை தங்கள் மீது கட்டவிழ்த்துவிட ஹமாஸ் அமைப்பு முயல்வதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியது.இஸ்ரேலுக்குள் கடந்த மாதம் நுழைந்து சுமாா் 1,000 பேரை படுகொலை செய்த ஹமாஸ் படையினா், சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக காஸாவுக்குள் கடத்தி வந்தனா்.பின்னா் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகும் ஹமாஸ் பிடியில் 137 பிணைக் கைதிகள் உள்ளனா்...படவரி.. காஸாவில் இஸ்ரேல் சிறப்புப் படையினா்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.