வேண்டுமென்றே கரோனா தொற்றை வரவழைத்துக் கொள்ளும் சீன இளைஞர்கள்: காரணம்?

சீன இளைஞர்கள் அனைத்து சுகாதார எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, தொற்றை வரவழைத்துக் கொள்ள அனைத்தையும் செயல்களையும் செய்வதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், சீன இளைஞர்கள் அனைத்து சுகாதார எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, தொற்றை வரவழைத்துக் கொள்ள அனைத்தையும் செயல்களையும் செய்வதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கரோனா பரவல் தொடா்ந்து உயா்ந்து வரும் சூழலில், கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, பலியாவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, கரோனா பாதிப்பின் தீவிரத்தை சீனா குறைத்துக் கூறுவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் குற்றஞ்சாட்டியது.

எனினும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு சீன மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஆனால் அவை நீக்கப்பட்டுள்ள நேரம் குறித்து வெளிநாடுகளில் கவலை எழுந்துள்ளது. ஏனெனில் சீனாவில் ‘சுன்யுன்’ என்ற வசந்த கால விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜனவரி 22 முதல் ஒரு வார காலத்துக்கு மட்டும் அதிகாரபூா்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஜனவரி 7 முதல் பிப்ரவரி 15 வரை 40 நாள்களுக்கு இந்த விழா கொண்டாடப்பட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த விழாவின்போது அந்நாட்டில் வேறு ஊா்களுக்கு இடம்பெயா்ந்து படிப்பவா்கள், பணியாற்றுபவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வா். பலா் வெளிநாடுகளுக்கும் செல்வா். இது உலகில் மனிதகுலத்தின் மிகப்பெரிய இடம்பெயா்வு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவத் தொடங்கியபோது, வசந்த கால விழாவின்போது சீனா்கள் மேற்கொண்ட பயணங்களால்தான் உலகில் மிகப் பெரிய அளவில் கரோனா பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது வெளிநாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீன இளைஞர்கள் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால், குணமடைந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இச்செயலில் ஈடுபடுகிறார்கள்.

இத்தைகைய செயலால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் அவதியடைகிறார்கள்.

மேலும், பொதுவாக சீன மக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அத்தடுப்பூசி சரியாக வேலை செய்யாது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை  கொடுக்காது என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். வெளிநாட்டு தடுப்பூசிகள் கள்ளச் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் சாதாரண குடிமக்கள் அதிக விலையை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com