தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் சேதம்

இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கடியில் மிக ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன. இதன் தாக்கம் ஆஸ்திரேலியா வரை உணரப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2023, 6:54 am

DIN

ஜகார்த்தா: இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கடியில் மிக ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன. இதன் தாக்கம் ஆஸ்திரேலியா வரை உணரப்பட்டது.

கிழக்கு இந்தோனேசியாவின் கிராமத்தில் இருந்த கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதாக தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 7.6க்கு பதிவான நிலநடுக்கம் காரணமாக, இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்து, மூன்று மணி நேரத்துக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மிகப்பெரிய அலைகள் கடலில் எழுந்ததாகவும், அதன் பிறகு அது குறைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பப்புவா, கிழக்கு நுசா டெங்கரா மாகாணங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலிலிருந்து 105 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், ஆழமான நிலநடுக்கங்கள், மிக லேசான மேற்பரப்பு சேதங்களை ஏற்படுத்தினாலும், மிகப் பரவலாக உணரப்படுவது இயல்பு.

ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். பலரும் நீண்ட நேர நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்ததாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இதுவரை இல்லாத வகையில் மிக நீண்ட நேரத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நள்ளிரவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் டிவிட்டர் பதிவுகள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.