மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!

பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர்.
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!

பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர்.

அமைதி வழிப் பேரணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழு முகக் கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு பதாகைகளை ஏந்தி நின்ற இந்தக் குழு பின்னர் அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எதிராக உள்ள மகாத்மா காந்தியின் சிலை நோக்கிச் சென்று தங்களது இந்த அமைதியான பேரணியை முடித்துக் கொண்டனர். 

இந்த அமைதி வழி போராட்டம் தொடர்பாக இந்திய வம்சாவளி பெண்கள் குழு தரப்பில் கூறியதாவது: மணிப்பூரில் இரண்டு குகி இன சகோதரிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக இந்த அமைதி வழிப் பேரணியை நாங்கள் நடத்தியுள்ளோம். அந்த சகோதரிகளுடன் நாங்கள் உறுதியாக துணை நிற்கிறோம் எனக் கூறினர்.

மணிப்பூரில் குகி இனப் பெண்களுக்கெதிரான இந்த கொடூரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் எனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com