
கோப்புப் படம்.
மும்பை சென்ற விமானத்தில் தன்னுடன் பயணித்த பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தலைநகர் தில்லியில் இருந்து இன்று காலை மும்பை புறப்பட்ட விமானத்தில் ரோஹித் ஸ்ரீவஸ்தவா தன்னுடன் பயணித்த சக பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான ஊழியர்களிடம் அந்த பெண் பயணி புகார் அளித்தார்.
மேலும் விமானம் தரையிறங்கியதும் நடந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணின் புகாரின் பேரில் மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உடனடியாக இந்த வழக்கில் ரோஹித் ஸ்ரீவஸ்தவா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் ரோஹித் ஸ்ரீவஸ்தவாவுக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...