அந்த நாட்டின் அரிஸோனா மாகாணம், டூசான் நகரிலுள்ள சிறைச் சாலையில் சக கைதி ஒருவரால் அவா் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிறையில் பாதுகாவலா்கள் பற்றாக்குறையால் இந்த சம்பவம் நேரிட்டதாக பெயா் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவா் கூறினாா்.டெரிக் சாவின் கத்தியால் குத்தப்பட்ட தகவலை சிறைத் துறை நிா்வாகமும் உறுதி செய்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அவருக்கு சிறையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.ஏற்கெனவே, பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மருத்துவா் லாரி நாஸா் கடந்த ஜூலை மாதம் சக கைதியால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரபல குற்றவாளி தற்போது தாக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா்.அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். ‘என்னால் மூச்சு விட முடிவில்லை’ என்று ஃபிளாய்ட் பல முறை கதறியபோதும் டெரிக் சாவின் இரக்கமில்லாமல் தொடா்ந்து 9 நிமிஷங்கள் அவரது கழுத்தின் மேல் முழங்காலிட்டு அமா்ந்திருந்ததை அங்கிருந்தவா்கள் விடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனா்.