

உக்ரைன் கீவ் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் பாதுகாப்பு படைகள் 24 உக்ரைன் ட்ரோன்களைத் தாக்கி அழித்ததாகவும் இவை மாஸ்கோவின் சுற்றுப் பகுதிகளில் தாக்க முயன்றதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலில் உயிர்ப்பலி எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவின் ஆளுநன் ஆண்ட்ரே வ்ரோபெய்வ் டெலிகிராம் தளத்தில், மூன்று கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பலியானவர்கள் யாருமில்லை எனவும், தெரிவித்துள்ளார்.
வடக்கு ரஷ்யா நகரமான டுலாவில் 12 மாடிக் கட்டிடத்தில் ஒரு ட்ரோன் வெடித்ததாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாஸ்கோவின் இரு விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது உள்ளூர் நேரம் 6 மணிக்கி மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதல்கள்!
சனிக்கிழமை உக்ரைன் மீது நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீவிர தாக்குதலை நடத்தியது ரஷ்யா.
ஈரானில் தயாரிக்கப்பட்ட 75 ஷஹீத் ட்ரோன்கள் உக்ரைன் மீது ஏவப்பட்டன. அவற்றில் 74 ட்ரோன்கள் உக்ரைன் பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 11 வயது சிறுமி உள்பட 5 பேர் காயமுற்றனர். கட்டிடங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.