தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்! 

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.
தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்! 

காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார்.

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்பினரின் தீவிர தாக்குதலால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 

பாலஸ்தீனப் பகுதியான காஸா மீது தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும்படி பாதுகாப்புப் படை வீரர்களிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். ஆனால், இந்த தாக்குதல் எப்போது என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனால் காஸா மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஏற்கெனவே இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்துள்ள நிலையில் தரைவழித் தாக்குதல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

முன்னதாக, காஸாவின் மக்கள்தொகையில் பாதி பேரான சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள், வடக்கு மற்றும் காஸா பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று இரவும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, எகிப்தில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பாலஸ்தீனியர்கள் தரப்பில் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் கூறியுள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் குழுவை முழுவதும் அழிப்போம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com