’நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது’ : அமெரிக்க அதிபர்

பைடன் குற்றச்சாட்டு: நெதன்யாகுவின் அணுகுமுறை மீது அமெரிக்க விமர்சனம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி நேர்காணலில் பைடன் இவ்வாறு கூறியது ஏற்கெனவே பிளவுபட்டுள்ள நட்பு நாடுகளின் உறவில் அதிக விரிசல் ஏற்படுவதைக் காட்டுகிறது.

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் போர் நடவடிக்கைகள் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ராஜ்ய மற்றும் ராணுவ உதவிகளை அளித்துவரும் அமெரிக்கா, இஸ்ரேல் நிவாரண பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விமர்சித்து வருகிறது.

நெதன்யாகு குறித்து ஜோ பைடன், “அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அது தவறானது. அவரது அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இடையே போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இன்னும் உடன்படிக்கை எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com