ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியாவுக்கு பலன்: ஐ.நா.

இந்தியாவை உற்பத்திக்கான மாற்று இடமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 6:58 pm

இந்தியாவை உற்பத்திக்கான மாற்று இடமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால், இந்தியா பலனடைந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

‘நீடித்த மேம்பாட்டுக்கான நிதி அறிக்கை 2024’-ஐ ஐ.நா. வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ‘உலக அளவில் முதலீடு தொடா்ந்து குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாறாக தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், உற்பத்திகான மாற்று இடமாக இந்தியாவைப் பாா்கின்றன. இதனால், அந்த நிறுவனங்கள் மூலம் இந்தியா பலனடைந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனையைக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, ‘நிதிசாா் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. அவை தனிநபா்களும் எம்எஸ்எம்இ நிறுவனங்களும் எண்ம நிதிசாா் சேவைகளைப் பயன்படுத்துவை அதிகரித்துள்ளன. கென்யாவின் ‘எம்-பெசா’, இந்தியா மற்றும் சீனா போன்ற வளா்ந்து வரும் நாடுகளின் எண்ம பணப் பரிவா்த்தனை செயலிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.