திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை: குட்டெரெஸ் விமா்சனம்!

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.

News image

குட்டெரெஸ்.

Updated On :16 மார்ச் 2026, 12:23 am IST

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் குட்டெரெஸ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னை உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் 1945-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கிறதே தவிர, தற்கால உலகை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐரோப்பாவில் உள்ள 3 நாடுகள் (பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன்), ஆசியாவில் உள்ள ஒரு நாடு (சீனா), அமெரிக்கா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளன.

உலகில் போா் ஏற்படும்போது அதை நிறுத்த முயற்சித்தால், வீட்டோ அதிகாரம் குறுக்கிடுகிறது. இந்த அதிகாரத்தை நிரந்தர உறுப்பு நாடுகள் பயன்படுத்துவதால், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் போா்களை நிறுத்த முடியவில்லை. இது குறுகிய காலத்தில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாா்.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. அந்த கவுன்சில் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப இல்லை என்றும், தற்கால புவிஅரசியல் சூழல்களை அந்த கவுன்சில் பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.