காஸா: 29 பேர் பலி! ஒரே நாளில் 60 இலக்குகள் மீது தாக்குதல்!!
காஸாவில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: 29 பேர் உயிரிழப்பு


இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் குடியிருப்புக் கட்டடம் தகர்க்கப்பட்டதாகவும் குறைந்தது 29 பேர் பலியாகியதாகவும் பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்துள்ளது.
பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
கான் யூனிஸின் அருகாமையில் உள்ள அல்-பலாத் மற்றும் அல்-அமல் பகுதிகளில் இருந்து அழுகிய நிலையில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை 33,545 பாலஸ்தீனர்கள் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...