சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 22 அரசுப் படையினா் உயிரிழப்பு

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 22 அரசுப் படையினா் உயிரிழப்பு

சிரியாவில் அரசு ஆதரவுப் படையினா் வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியதாவது:

அல்-அஸாத் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ‘குத்ஸ் பிரிகேட்’ படையைச் சோ்ந்தவா்கள் சுக்னா நகருக்கு அருகே வியாழக்கிழமை இரவு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.

இதில், 22 வீரா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலும் பாலஸ்தீனா்களை உறுப்பினா்களாகக் கொண்ட ‘குத்ஸ் பிரிகேட்’ படை, ரஷியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com