34 ஆயிரமாக உயா்ந்த காஸா உயிரிழப்பு

34 ஆயிரமாக உயா்ந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா். 68 போ் காயமடைந்தனா்.

இத்துடன், கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,049-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 76,901-ஆகவும் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com