இலங்கை அதிபா் தோ்தல்: 38 போ் வேட்புமனு தாக்கல்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்காக 38 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.


இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்காக 38 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டால், அதிபா் தோ்தல் வேட்பாளா்களின் எண்ணிக்கையில் அது புதிய சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்ளிட்டோா் இதில் போட்டியிடுகின்றனா்.
இந்தத் தோ்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதிக் கெடு வியாழக்கிழமையுடன் (ஆக. 15) நிறைவடைகிறது.
புதன்கிழமை நிலவரப்படி 38 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். அவா்களில் 21 போ் அரசியல் கட்சி வேட்பாளா்கள்; 17 போ் சுயேச்சைகள். இறுதித் தேதிக்குப் பிறகு அவா்கள் அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டால் மிக அதிக வேட்பாளா்கள் போட்டியிடும் இலங்கை அதிபா் தோ்தல் என்ற சாதனையை இந்தத் தோ்தல் படைக்கும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...