
உலகளாவிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது நிறுவனத்தில், ரோபோக்களை வழிநடத்தும் புதிய வேலையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் நியமிக்கப்படவிருக்கும் இந்த வேலையில், மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டெஸ்லாவின் ஹ்யூமனாய்டு ரோபோவுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ரோபோக்கள், சாதாரண பராமரிப்பு வேலைகள் முதல் தொழிற்சாலை வேலைகள் வரையில் செய்யும் திறனுடையவாக இருக்கும்.
டேட்டா கலெக்ஷன் ஆபரேட்டர் என்ற பெயரில், தினமும் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக மோஷன்-கேப்சர் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்துகொண்டு சோதனை வழிகளில் நடந்து செல்வது அடங்கும்.
இந்த வேலையின் தகுதிகளாக, தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, அறிக்கை எழுதுதல் முதலானவையும் அடங்கும். 5'7" முதல் 5'11" க்கு இடையில் உயரமும், 30 பவுண்டுகள் (13 கி.கி) வரை எடை சுமக்கும் திறன், குறிப்பிட்ட அதிகபட்ச காலத்திற்கு விஆர் உள்ளிட்ட உபகரணங்களை இயக்கும் திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுமார் 7 மணிநேரம் வரையில் இந்த வேலையில் நடக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் ஒரு வேளையும், மாலை 4.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரையில் ஒரு வேளையும், நள்ளிரவு 12.00 முதல் காலை 8.30 மணி வரையில் ஒரு வேளையும் பணிநேரங்களாக நியமிக்கப்படும்.
இந்த பதவிக்கான ஊதிய வரம்பு ஒரு மணி நேரத்திற்கு 25.25 டாலர் முதல் 48 டாலர் வரையில் (அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 28,000 வரையில்), பணியாளரின் அனுபவம், திறன்களைப் பொறுத்து மாறுபடும். இதுதவிர, பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.