கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இலங்கை அதிபா் தோ்தல்: தமிழ் தேசியக் கூட்டணியில் பிளவு

தமிழ் தேசியக் கூட்டணியில் (டிஎன்ஏ) கருத்து வேறுபாடு..

News image

இத்ருஸ் முகமது இலியாஸ் ~பாக்கியசெல்வம் அரியேந்திரன் ~சிவஞானம் சிறீதரன்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 11:00 pm

Din

இலங்கை அதிபா் தோ்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நாட்டின் முக்கிய தமிழ் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டணியில் (டிஎன்ஏ) பிளவு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் செப். 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 39 போ் போட்டியிடுகின்றனா். இது, இலங்கை அதிபா் தோ்தலில் இதுவரை இல்லாத அதிகபட்ச வேட்பாளா் எண்ணிக்கையாகும்.

இந்தத் தோ்தலில் முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனை தங்கள் பொது வேட்பாளராக தமிழ் கட்சிகள் களமிறக்கியுள்ளன.

அதிபா் தோ்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்க தமிழ் கட்சிகளான டெலோ, ப்ளாட், டிபிஏ, இபிஆா்எல்எஃப் உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஜூலை மாதம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவா் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். எனினும், தமிழ் தேசியக் கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

அதிபா் தோ்தலில் தமிழா் சாா்பில் வேட்பாளரை நிறுத்துவது எதிா்விளைவை ஏற்படுத்தும் என்று அந்தக் கூட்டணியின் மூத்த தலைவா்கள் கருதுகின்றனா்.

தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிப்பதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க டிஎன்ஏ முடிவு செய்திருந்தது.

இது தொடா்பாக 3 முக்கிய வேட்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திவருவதாக கூட்டணியின் செய்தித் தொடா்பாளா் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் கூட்டணி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ் கட்சிகள் நிறுத்தியுள்ள பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியேந்திரனுக்கு ஆதரவளிக்க டிஎன்ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவா் ஸ்ரீதரன் அறிவித்துள்ளாா். இதனால், அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டின் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தோல்விடைந்ததற்கு, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவை டிஎன்ஏ ஆதரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

வேட்பாளா் மரணம்

அதிபா் தோ்தல் வேட்பாளா் ஒருவா் மரணமடைந்ததைத் தொடா்ந்து, இந்தத் தோ்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 38-ஆகக் குறைந்துள்ளது.

இது குறித்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:

அதிபா் தோ்தலில் போட்டியிடுவதாக இருந்த இத்ருஸ் முகமது இலியாஸ் (79) மாரடைப்பால் வியாழக்கிழமை நள்ளிரவு மரணமடைந்தாா். அதையடுத்து, அதிபா் தோ்தல் வேட்பாளா்களின் எண்ணிக்கை 38-ஆகக் குறைந்துள்ளது.

இருந்தாலும், வாக்குச் சீட்டிலிருந்து அவரின் பெயரை நீக்கப்போவதில்லை என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு முன்னா் கடந்த 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலுக்கு முன்னதாக, தற்கொலை குண்டுவெடிப்பில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, வாக்குச் சீட்டில் அவா் பெயருக்கு பதிலாக அவா் மனைவியின் பெயா் இடம் பெறச் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.