
பாகிஸ்தான் நாட்டிற்கு நரேந்திர மோடியைப் போன்ற தலைமைத் தேவைப்படுவதாக அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் சாஜித் தரார் இன்று (ஆக. 25) தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேசப்பற்று முழக்கம் இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவில் தங்கியுள்ள மற்றும் பணிபுரிந்து வருபவர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் தரார் அமெரிகாவின் பால்டிமோர் பகுதியில் முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை வகித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் சார்பு குடியரசுக் கட்சித் தலைவரும், டிரம்பிற்கான அமெரிக்க முஸ்லிம்களின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார்.
பிடிஐ ஆங்கிய ஊடகத்துக்கு பேட்டியளித்த சாஜித் தரார், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சிறப்பாகியுள்ளது. இவரைப் போன்ற தலைவர் தலைமைப் பொறுப்பேற்றால் பாகிஸ்தானுக்கு உதவியாக இருக்கும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி அண்டை நாடுகளில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் வளர்ச்சியிலும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி, அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை வலுவாக்குகிறது.
இதனை உதாரணமாகக் கொண்டு பாகிஸ்தான் கற்க வேண்டும், கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சீரிய முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிலையங்கள் நாட்டுக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளன.
எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு கல்வியில் முதலீடு செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் இந்தியா எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரான சாஜித் தரார், 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றார்.
அமெரிக்க தேர்தல் குறித்து பேசிய அவர், அதிபர் தேர்தலுக்கான டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவது அமெரிக்காவை மீண்டும் மகத்துவத்தின் பாதையில் கொண்டு செல்லும். தேர்தலுக்கு வருவதற்கு முன்பே தனது பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டவர் டிரம்ப். தற்போதைய அவரின் நோக்கமெல்லாம், அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவது மட்டுமே எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.