பாகிஸ்தான் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்; 32 பேர் பலி

பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்AP
Published on
Updated on
1 min read

கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இன்று காலை பேருந்தில் வந்த 23 பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பலோசிஸ்தானில், தனிநபர்களின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

பேருந்தில் வந்தவர்களை கீழே இறக்கி, அடையாளத்தை உறுதிசெய்துகொண்ட பிறகு, பயங்கரவாதிகள் அவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் பயங்கரவாதிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்
மைக் கிடைத்தால் போதும்-பழனிசாமி; நீங்க பதவிக்கு வந்தது எப்படி? அண்ணாமலை! வெடிக்கும் வார்த்தைப்போர்

பலோசிஸ்தானின் முசாகேல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, பேருந்து வழியில்லாமல் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், பேருந்துக்குள் ஏறி, துப்பாக்கி முனையில் அனைவரின் அடையாளங்களையும் பரிசோதித்துவிட்டு, அவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கி சுட்டுக்கொன்றுள்ளார்.

அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்AP

பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபர் அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த 12 வாகனங்கள் மீது தீ வைத்துச் சென்றதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கிடையே, கலாட் மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நெடுஞ்சாலையில் சென்ற தனிநபர்களின் வாகனங்களை நோக்கி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 4 காவலர்களும், 5 பொதுமக்களும் அடங்குவர்.

பயங்கரவாதிகள், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றுள்ளனர். ஏற்கனவே, மஸ்துங் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது, காவல்நிலையம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் தற்போது பயங்கரவாத தாக்குதல் அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com