
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கட்டடம் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து வருகிறது. 2022 பிப்ரவரியில் ஆரம்பித்த போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் ரஷியாவில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக ரஷியா, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கட்டடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைனில் தொடர்ச்சியாக இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எரிசக்தி வளங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தொடர் தாக்குதலால் கீவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.