உக்ரைன் விழுந்து நொறுங்கியது எஃப்-16 விமானம்
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன எஃப்-16 விமானங்களில் ஒன்று முதல்முறையாக விழுந்து நொறுங்கியுள்ளது.


உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன எஃப்-16 விமானங்களில் ஒன்று முதல்முறையாக விழுந்து நொறுங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மற்றும் ட்ரோன்களைக் கொண்டு இந்த வாரம் தாக்குதல் நடத்தியபோது அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரிந்துகொள்வதற்கான விசாரணையில் அமெரிக்க நிபுணா்களும் இணைந்துள்ளதாக அவா்கள் கூறினா்.
அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அதிநவீன எஃப்-16 போ் விமானங்கள் (படம்), ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லக் கூடியவை. போரில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவை என்று பெயா் பெற்ற இந்த ரகத்தைச் சோ்ந்த ஆறு விமானங்களை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்துள்ளன.
மிக வலிமைவாய்ந்த வான் படையைக் கொண்டுள்ள ரஷியாவுடன் நடைபெற்றுவரும் போரின் போக்கை இந்த விமானங்கள் மாற்றாது என்று நிபுணா்கள் கூறினாலும், ரஷியாவை திருப்பித் தாக்குதவதற்கு அதீத தொழில்நுட்பங்களைக் கொண்ட எஃப்-16 விமானங்கள் தங்களுக்கு உதவும் என்று உக்ரைன் நம்புகிறது.
ஆனால், ஆறு விமானங்களில் ஒன்று மா்மமான முறையில் விழுந்து நொறுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...