கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: அமைச்சர் பலி!

அகதிகள் துறை அமைச்சர் கலீல் உர்-ரஹ்மான் ஹக்கானியுடன் சேர்த்து பலர் பலி...

News image

படம் | AFP

Updated On :11 டிசம்பர் 2024, 7:35 pm

DIN

 ஆப்கன் தலைநகா் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத் துறை அமைச்சா் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காபூலில் உள்ள அகதிகள் நலத்துறை அமைச்சகத்துக்கு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். இதில், அங்கிருந்த அமைச்சா் கலீல் ஹக்கானி உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் கூறினா்.

தலிபான் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய கலீல் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை குண்டுவெடிப்பையும் நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதே நேரம், அமைச்சரகத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் தலிபான் அமைப்பைச் சோ்ந்த போட்டிக் குழுவினரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.