ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாளர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்திலிந்து தவறி விழுந்தவர் மீது விமானம் ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
34 வயதான ஜோர்டனைச் சேர்ந்த பணியாளர் அந்த இழுவை வண்டியில் அமர்ந்து வந்தபோது தடுமாறி வெளியே விழுந்துள்ளார். அந்த வண்டி இழுத்து வந்த விமானம் கீழே விழுந்தவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்ததாக ஹாங்காங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவசர காலப் பணியாளர்களால் அவரது உடல் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது எனக் காவல்துறையினர் கூறினர். அந்த இழுவை வாகனத்தை ஓட்டிய 60 வயதான நபரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்க: கனடாவில் கோயில் உண்டியல்களைக் கொள்ளையடித்த இந்தியர் கைது!
உயிரிழந்த நபர் சீன விமான சேவையின் பணியாளர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.