காஸா: ஓர் இரவில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை?

காஸாவில் இரவு தாக்குதல்: 67 பேர் பலி, உலக நாடுகள் கண்டனம்
உயிரிழந்த குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் தந்தை
உயிரிழந்த குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் தந்தைAP

காஸாவில் இஸ்ரேல் நடத்திய இரவு நேரத் தாக்குதலில் குறைந்தது 67 பேர் பலியாகினர். பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்திருந்த இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மத்திய காஸாவில் பல இடங்களில் நடந்த தாக்குதலில் பலியான 44 பேரின் உடல்கள், தெயிர் அல்-பலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இறுதி சடங்குகளை மேற்கொண்டதாக அசோசியேடட் பிரஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ராபாவில் பலியான பாலஸ்தீனர்கள்
ராபாவில் பலியான பாலஸ்தீனர்கள்AP

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள ராபாவில் வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். அது பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் வீடு எனவும் அவரது குடும்பத்தினர் பலியானதாகவும் அல்-நஜ்ஜார் மருத்துவமனை தெரிவித்தது.

காஸாவில் பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் ராபாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கும் லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றும் இஸ்ரேலின் முடிவு, காஸா மக்களை பேராபத்தில் தள்ளும் என உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன.

உயிரிழந்த குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் தந்தை
காஸா படுகொலைக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டுகிறது: சீனா விமர்சனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com