பரவலாக தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்: காரணம் என்ன?

அமெரிக்காவில் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்: பாதிக்கப்பட்ட பயனர்கள் அதிர்ச்சி!
மாதிரி படம்
மாதிரி படம்Freepik

அமெரிக்காவில் பரவலாக தொலைத்தொடர்பு சேவை இணைப்புகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரதான தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி& டி, கிரிக்கெட் வயர்லெஸ், வெரிசோன் மற்றும் டி-மொபைல் உள்ளிட்டவற்றின் பயனர்களுக்கு இணைப்புகள் கிடைக்கவில்லை.

ஏடி& டி சேவை பயனர்கள் 64 ஆயிரம் பேர் இணைய சேவையில் துண்டிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.30 மணி முதல் இந்த துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வயர்லெஸ் பயனர்கள் 13 ஆயிரம் பேரும் வெரிசோன் பயனர்கள் 4 ஆயிரம் பேரும் இதே குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

இதுவரை எதனால் இந்த துண்டிப்பு நிகழ்கிறது என்பது குறித்த எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

மாதிரி படம்
இட்லி, தோசை சாப்பிட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com