தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பு: தொடரும் மீட்புப் பணி

வெலன்சியாவில் தீ விபத்து: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
தீப்பற்றிய கட்டடங்கள்
தீப்பற்றிய கட்டடங்கள்AP

கிழக்கு ஸ்பெயின் நகரமான வெலன்சியாவில் உள்ள இரண்டு குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டங்களில் தீ பரவியது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும் 19 பேர் நிலை இன்னும் அறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரின் வெளிப்புறத்தில் உள்ள இந்த குடியிருப்புகளில் தீ பரவியதும் அங்கு விரைந்த மீட்பு வீரர்கள் குடியிருப்பின் பால்கனிகளில் உதவிக்காக நின்ற மக்களைக் காப்பற்றினர்.

மீட்புப் பணியில் வீரர்கள்
மீட்புப் பணியில் வீரர்கள்AP

ராணுவ அவசர உதவி படையிலிருந்து 90 வீரர்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் 40 தீயணைப்பு டிரக்குகள் அங்கு பணியில் உள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார். 14 அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரவில்லை.

15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைக்கப்பட்டாலும் மீட்பு வீரர்களால் கட்டடத்திற்குள் நுழைய இயலவில்லை.

தீயணைக்கப்பட்ட கட்டடம்
தீயணைக்கப்பட்ட கட்டடம்AP

இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கியிருக்கின்றனர் என்பது குறித்தும் தெளிவாக தெரியவில்லை.

ஆறு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் நால்வர் மீட்பு பணியின்போது காயம் பட்ட வீரர்கள் எனவும் நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டங்கள் என்பதால் தீ வேகமாக பரவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com